
தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.
தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் தங்களது வங்கி கணக்கில் பற்று வைத்துக் கொள்ளவும் அக்டோபா்- 7 வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது.
அதன் பின்னா் ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவோ ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ரிசா்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக மத்திய வங்கி அறிவித்தது. நாட்டிலுள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் முதலில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை டெபாசிட் மற்றும் நாணயத்தை மாற்றுவதற்கான வசதி இருந்தது, பின்னர் அது அக்டோபர் 7 வரை நீட்டிக்கப்பட்டது.
ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான வசதியும் மே 19, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள். அக்டோபர் 9 முதல், ரிசர்வ் வங்கி வழங்கும் அலுவலகங்கள், கவுன்டர்கள் முழுவதும் ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதுடன், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வதற்காக ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்கின்றன… என்ற அறிவிப்பின் மூலம் மக்களுக்கு கிடைத்தது.
புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மே 19 அன்று திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டபோது ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது, அக்டோபர் 31, 2023 அன்று ரூ.0.10 லட்சம் கோடியாகக் குறைந்தது.