ரூ.50 கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
50 கோடி ரூபாய்க்கும் அதிகமான முறைகேடுகள் பற்றிய விவரங்களை 15 நாட்களுக்குள் கண்டறிந்து தெரிவிக்குமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், திட்டமிட்டே திருப்பிச் செலுத்தப்படாத கடன் மோசடிகள், அந்நிய செலாவணி உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அவை குறித்த விவரங்களை சிபிஐயிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சக செயலாளர் ராஜீவ்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.