புதுதில்லி :
வரும் 2018ஆம் ஆண்டில் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ., பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். நீட் உள்ளிட்ட எந்த ஒரு அகில இந்திய தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை என்று அது கூறியுள்ளது.
மேலும், ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள அட்டையை வைத்து தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு அது உத்தரவிட்டுள்ளது.