கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மெர்குரி’ டீசர் வெளியீடு

சினி நியூஸ் சினிமா

இறைவி படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் மெர்குரி.

பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா (மேயாத மான் படத்தில் நடித்தவர்) நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசை – சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார். ஒளிப்பதிவு – திரு.

கமல் நடித்து முன்னர் வெளிவந்த பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படம். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது. வசனமே இல்லாத இந்தப் படத்துக்கு பின்னணி இசைதான் மிக முக்கியமானது

தமிழ்ப் புத்தாண்டுக்கு  -ஏப்ரல் 13 அன்று மெர்குரி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை சமூக வலைத்தளங்களில் தனுஷ், நிவின் பாலி, ராணா டகுபதி, ரக்‌ஷித் ஷெட்டி ஆகிய நால்வரும் வெளியிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.