திருவனந்தபுரம்:
திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட்களை வெளியேற்றி இப்போது பாஜக., ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, திரிபுராவில் கம்யூனிஸ்ட்களின் அடையாளமான லெனின் சிலையை தொண்டர்கள் சிலர் அப்புறப் படுத்தியுள்ளனர். இது தேசிய அளவில் பெரிய பரபரப்பையும், எதிர்வினையையும் நிகழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சிலை அரசியல் துவங்கிவிட்டது.
உ.பி.யில் அம்பேத்கர் சிலை, மேற்கு வங்கத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி சிலை, தமிழகத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலை என சிலைகள் சேதப் படுத்தப் படுவது நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில், கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் ஒரே மாநிலமான கேரளத்தில், இப்போது காந்தி சிலை என சிலைகள் சேதப் படுத்தப் படுவது தொடர்கிறது.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், தலிபரம்பா பகுதியில் மகாத்மா காந்தி சிலையின் கண்ணாடியை மர்ம நபர்கள் சேதபடுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள பாஜக,வின் மாநில பொதுச்செயலர் கே.சுரேந்திரன் இடு குறித்து ஒரு பதிவினை டிவிட்டரில் இட்டுள்ளார். அதில், லெனின் சித்தாந்தம் கோடிக் கணக்கானவர்களை கொன்றுள்ளது. கம்யூனிசத்தின் வீழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக பல நாடுகளில் லெனின் சிலைகளை மக்கள் அப்புறப் படுத்தியுள்ளனர். இங்கே சா.கிருஷ்ணப் பிள்ளையின் சிலையை எரித்தவர்கள்தான், இப்போது லெனின் சிலை அகற்றப் பட்டதற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது கேரளத்தில் காந்தி சிலையும் தாக்குதல் பட்டியலில் இருப்பது கவனத்துக்குரியது.
History gives ample evidence that Lenin & his ideology killed crores. Time & again many countries destroyed his statues to celebrate eradication of communism. Those who burnt Sa. Krishna Pillai’s statue now is shedding crocodile tears for destruction of Lenin statue. @cpimspeak pic.twitter.com/OPdI8P15iX
— K Surendran (@surendranbjp) March 7, 2018