October 15, 2024, 6:26 AM
25.4 C
Chennai

புரட்டாசி மாத பூஜைக்காக… சபரிமலை நடை திறப்பு!

sabarimala iyappan sannidhi opened

கேரளாவில் பிரபலமானதாக கொண்டாடப்படும் திருவோணம் பண்டிகை மற்றும் புரட்டாசி மாத பூஜை வைபவத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. செப்.14 முதல் பூஜைகள் நடைபெறும். செப்.15இல் திருவோணம் பண்டிகை பூஜை வழிபாடு திருவோண சத்யா விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் திருவோணத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

கேரளாவில் இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 இல் தலைவோணம் பண்டிகையும் செப்டம்பர் 15 திருவோணம் பண்டிகை விழாவிற்கு செப்டம்பர் 16 மூன்றாம் ஓணமும் செப்டம்பர் 17 கடைசி ஓணம் பண்டிகையும் நான்கு நாட்கள் பண்டிகையாக திருவோணம் கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவு காரணமாக கேரளா அரசு திருவோணம் பண்டிகையைக் கொண்டாடவில்லை என ஏற்கனவே அறிவித்து விட்டது.

இருந்தாலும் கோவில்கள் மற்றும் பொது இடங்களில் திருவோணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி ஏற்கெனவே அஸ்தம் நட்சத்திரம் முதல் நடந்து வருகிறது. திருவோணம் பண்டிகையையொட்டி இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி சபரிமலை சன்னிதான நடையை திறந்து வைத்தார்.

ALSO READ:  சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

பக்தர்களுக்கு ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து பஸ்பப் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று வேறு பூஜைகள் ஏதும் இன்றி இரவு நடை அடைக்கப்பட்டு நாளை செப்டம்பர் 14 முதல் சபரிமலை ஐயப்பனுக்கு திருவோணம் பண்டிகை விழா மையபிஷேகம் சிறப்பு பூஜை வழிபாடுகள் இரவு படி பூஜை உட்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

திருவோண சிறப்பு பூஜை, வழிபாடுகள் செப்.15ல் நடைபெறும். ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் செப். 14, 15, 16, 17ஆகிய தேதிகளில் ஓண விருந்து (சத்யா) வழங்கப்படும்.

தொடர்ந்து புரட்டாசி மாத பூஜையை முன்னிட்டு 21-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான மாத பூஜை நெய் அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சபரிமலை வனப்பகுதியில் நல்ல மழை பெய்ததால் பம்பை நதியில் தண்ணீர் செல்கிறது. பக்தர்கள் பம்பை நதிக்கரையோரம் வாகனங்களை நிறுத்தும் போது கவனமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  ‘ஒரு பிடி அவல்’ எனும் குறியீடு!

கேரளாவில் முக்கியப் பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. திருவனந்தபுரம், புனலூர், செங்கனூர், கொச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

ரயிலில் வரும் பயணிகள் சென்னையில் இருந்து செங்கோட்டை வழி கொல்லம் செல்லும் ரயிலில் புனலூரில் இறங்கினால், புனலூர் ரயில் நிலையத்திலிருந்து பம்பைக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணி – எர்ணாகுளம், மதுரை – குருவாயூர் ரயில்களில் புனலூர் வரை பயணித்து, உணவுகளில் இருந்து பஸ் அல்லது டூரிஸ்ட் வாகனம் மூலம் பம்பைக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இந்த மாதம் தற்போது கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இருப்பினும் வனப்பகுதியில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.15- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தில்… வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால்,

தபால் துறையில் 344 பணியிடங்கள்; வேலைவாய்ப்பு தவறவிட்டுடாதீங்க!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.

10,12ம் வகுப்பு தேர்வு தேதிகள் அறிவிப்பு!

2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து