
32 கோடிப் பேர் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் என்னும் அரசு சாரா அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது 32கோடிப் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் இருந்து அனுமதி கிடைத்ததும் மேலும் 54 கோடியே 50 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
இந்த இணைப்புக்கு மேலும் எவ்வளவு காலம் ஆகும் எனக் கேட்டபோது 32 கோடி ஆதார் எண்கள் மூன்றே மாதத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார் ராவத்.



