
ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.
ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்த பட்ச வெப்ப நிலையை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.
இந்த நிலையில், ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்குமாறு மாற்றியமைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கடடார் தெரிவித்துள்ளார்.
20 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான அளவையோ, 28 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ ஏசி-க்களில் இனி அளவை மாற்ற முடியாது. இந்த குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச அளவீடுகளுடன் தான் ஏசி.,க்கள் விற்பனைக்கு வருமாம்.
இது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.
பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.





