அம்ரித் பாரத் ரயில்கள்; தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம்!

railway news - 2026
#image_title

அம்ரித் பாரத் ரயில்கள் திருவனந்தபுரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் பகுதி வழியே ரயில்கள் செல்லும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த தென்காசி, ராஜபாளையம் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக., கைப்பற்றி சாதனை படைதத்து. எனவே பாஜக., தலைவர்கள் தங்கள் பகுதியான திருவனந்தபுரத்துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில் போக்குவத்தில் பெரிதும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோல், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், பாஜக., இம்முறை அங்கு வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது. இந்த முறை அங்கு பாஜக., அலை வீசுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக இருந்தாலும், மத்திய பாஜக., அரசு மேற்கு வங்கத்தில் மக்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செய்லபடுத்தியும் வருகிறது.

அசாமில் பாஜக., ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், மேற்கு வங்கத்தின் மால்டா நகருக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ரயில் சேவைகளையும், நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

மேற்கு வங்கத்தின் ஹவ்ரா முதல் அசாம் கௌஹாத்தி வரை இயக்கப்பட உள்ள நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மால்டா ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிவைத்தார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், வேகமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க வழி செய்யும். வழக்கமான பயண நேரத்தை விட இது இரண்டரை மணிநேரம் முன்கூட்டியே சென்றுவிடும்.

3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

தமிழ்நாட்டுக்கும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தையும் மேற்கு வங்கம், அசாம் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் நான்கு அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த நான்கு ரயில் சேவைகளில் மூன்று ரயில்கள் மேற்கு வங்கம் – தமிழ்நாடு இடையே இயக்கப்படுகின்றன.

மேற்கு வங்கத்தின் சாண்ட்ரகாச்சி -சென்னை தாம்பரம் (ரயில் எண்: 16107/16108) இடையேயான ரயில், தமிழ்நாட்டின் நாகர்கோவில் – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையேயான (ரயில் எண்: 20603/20604) ரயில், தமிழ்நாட்டின் திருச்சி – மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி இடையேயான (ரயில் எண்: 20609/20610) ரயில் என மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இன்று தொடங்கப்பட உள்ளது. இதுமட்டுமின்றி SMVT பெங்களூரு – மேற்கு வங்கத்தின் அலிபூர் துரார் இடையேவும் ஒரு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருக்கிறது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கவனிக்க வேண்டியதே, அதில் அனைத்து பெட்டிகளும் சாதாரண பெட்டிகளாகும். அதாவது குளிர்சாதன வசதிகள் கொண்ட பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையவே கிடையாது. அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும். பொதுபெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இதில் உள்ளன. இதில் 1000 கி.மீ., தூரத்திற்கு 500 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இன்னும் குறைவான தூரத்திற்கு, குறைவான கட்டணமே வசூலிக்கப்படும்.

நாகர்கோயிலுக்கு வந்த அம்ரித் பாரத் ரயில் பெட்டிகள்!

நாகர்கோவிலில் இருந்து 2 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகள் துவங்கி வைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையிலிருந்து இன்று அனுப்பப்பி வைக்க ப்படுவதாக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமித்பாரத் ரேக் 17 நாகர்கோவில் நோக்கி அனுப்பப்படுகிறது // வரும் ஜனவரி 22/23 தேதிகளில் இந்த புதிய வழித்தடத்தில் அம்ரித் பாரத் ரயில் துவங்கி வைக்கப்பட உள்ளது

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

திருவனந்தபுரம் ஹைதராபாத் ,
திருவனந்தபுரம் தாம்பரம்,
நாகர்கோவில் ஹைதராபாத்,
நாகர்கோவில் மங்களூர்,
கோயம்புத்தூர் தன்பாத்

உள்ளிட்ட ஐந்து வழித்தடங்களில் புதிய அமிர்த பாரதி ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்க உள்ளார் என ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் தாம்பரம் – திருவனந்தபுரம் அல்லது, திருவனந்தபுரம் – ஹைதராபாத் ரயில் கொல்லம், செங்கோட்டை, ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடம் இருந்தது. ஆனால், ஒற்றை ரயில்பாதை, மலைப் பாதை, வருவாய் பிரச்னை என பல காரணங்களைச் சொல்லி, வழக்கம்போல் நாகர்கோயில் திருநெல்வேலி பாதையிலேயே இந்த ரயில்கள் திட்டமிடப்பட்டதால், தென்காசி, ராஜபாளையம் பகுதி மக்கள் பெரும் ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories