ஆந்திராவில் பேருந்துகளால் வெளிவரும் புகையால் மாசு அதிகமாவதை அடுத்து பேட்டரி பஸ் இயக்க சந்திரபாபு நாயுடுவின் அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் மானியத்துடன் பேட்டரி பேருந்துகளை வாங்க ஆந்திர அரசு முடிவு செய்தது.
32 பேர் அமரும் வகையில் உள்ள இந்த பேருந்தில் கியருக்கு பதில் 3 பட்டன்கள் இருக்கும். முதல்கட்டமாக ஆந்திர அரசு இரண்டு பேருந்துகளை கோல்ட் ஸ்டோன் எலக்ட்ரிக் பஸ் நிறுவனத்திடம் வாங்கியுள்ளது. திருப்பதி-திருமலை மற்றும் விஜயவாடா விமான நிலையம்- வெலகபுடி தலைமைச் செயலகம் ஆகிய வழிகளில் இந்த பேருந்து இயக்கப்படுகிறது
இந்த பேருந்தில் சென்ஸார் வசதி உள்ளதால் விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே தெரியப்படுத்தும். சத்தம் இல்லாமல், மாசு ஏற்படுத்தும் புகையும் இல்லாமல் அமைந்துள்ள இந்த சொகுசு பேருந்தில் பயணம் செய்வது தனி அனுபவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பேருந்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மேலும் 40 பேருந்துகளை ஆந்திர அரசு வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.