ராஞ்சி : கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ், குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
பீகாரில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசுக் கருவூலங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை எடுத்து முறைகேடு செய்தார் என்று வழக்கு தொடரப் பட்டது. ஏற்கெனவே லாலு பிரசாத் யாவத், இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீதான 4 வது வழக்கில், மாட்டுத் தீவனம் வாங்கியதாக தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.5 கோடி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் உள்பட 19 பேரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு அளித்தது.
இந்த வழக்கில் இருந்து 12 பேரை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவ், ஏற்கெனவே கால்நடைத் தீவனம் தொடர்பான 3 ஊழல் வழக்கில் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.