
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் பட்டால் கர்நாடகா கொந்தளிக்கும்… போராட்டம் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் வாட்டாள் நாகராஜ்.
காவிரி விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வட்டாள் நாகராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும்; காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன. அதற்கு எதிராக ஏப்ரல் 5 ஆம் தேதி கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.



