ஒரே நாளில் ஜாமீன்; மும்பை பறந்து வந்த சல்மான் கான்!

Salman khan 1 - 2026

மும்பை: மான் வேட்டை வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதை அடுத்து அவர் இன்று மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் கடந்த வியாழன் அன்று 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை அடுத்து உடனே ஜோத்பூர் சிறையில் சல்மான் கான் அடைக்கப்பட்டார். பின், ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனு, நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி முன்பு வெள்ளிக்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி மாற்றத்தால் உடனே வழங்கப்படவில்லை.

தொடர்ந்து சனிக்கிழமை இன்று, ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமாரை, சல்மான் கானுக்கு முன்னதாக தண்டனை வழங்கிய தேவ் குமார் காத்ரி சந்தித்துப் பேசினார். பின் நீதிமன்றம் கூடியதும் சல்மான் கானின் சகோதரி அல்விரா மற்றும் பாதுகாவலர் ஷேரா மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். 15 வது வழக்காக இருந்த சல்மான் கானின் ஜாமின் மனு முதலாவதாக விசாரிக்கப்பட்டது.

salman khan2 - 2026

சல்மான் கான் சிறையில் தான் இருக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சல்மான் கான் வழக்கறிஞர், சாட்சியம் நம்பத் தகுந்ததாக இல்லை என்று வாதிட்டார். வாதங்களைக் கேட்ட நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

3 மணி அளவில் மீண்டும் நீதிமன்றம் வந்த நீதிபதி, சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். சல்மான் கான் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றும், மே 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இரண்டு இரவுகளை சிறையில் கழித்த சல்மான் கான் இன்றே சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மாலை மும்பை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories