நாளை அதிகாலை விண்ணில் பாய்கிறது PSLV-C41 ராக்கெட்.
போக்குவரத்து மற்றும் வழிகாட்டு தொழில்நுட்பங்களை வழங்க உதவும் IRNSS-1i செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப் படுவதை யொட்டி, 32 மணி நேர கவுண்ட் டவுன் நடைபெற்று வருகிறது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துக்கு இணையாக நாவிக் (Navic) தொழில்நுட்பத்தை சொந்தமாக உருவாக்க இஸ்ரோ முடிவு செய்தது.
இதனையடுத்து நாவிக் தொழில்நுட்பத்தை வழங்கும் 7 செயற்கைக்கோள்களில், முதல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ்-1A செயற்கைக்கோள், 2013ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 6 செயற்கைக்கோள்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் செலுத்தப்பட்டு, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன.