தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகிய 4 நீதிபதிகள் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யகோரும் நோட்டீஸை குடியரசு துணை தலைவரும், மாநிலங்கள் அவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்தன. இந்த நோட்டீசை வெங்கையா நாயுடு
இன்று நிராகரித்தார்.
இதுகுறித்து பேசிய கபில் சிபில், தலைமை நீதிபதி நீக்க தீர்மானத்தை துணை குடியரசுத்தலைவர் நிராகரித்தது சட்டவிரோதம். தீர்மானம் முறையாக இருக்கிறதா? இல்லையா என்பதை மட்டுமே ஆராய வேண்டும். தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.