அசராம் பாபு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த அசராம் பாபுவும், இவருடைய மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவர் மற்றும் உத்தரபிரதேச சிறுமி ஆகியோரை பாலியியல் பலாத்காரம் செய்ததாக கூறி, கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.