காவிரி வழக்கில் தாமதத்துக்கு பிரதமர் மோடியைக் காரணம் காட்டிய மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்!

supreme court of india - 2026

புது தில்லி: பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி பங்கீட்டிற்கான வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரினார்.

காவிரி தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. காவிரி வழக்கில் வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதி இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது மத்திய அரசு.

அப்போது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை குறித்த காலத்தில் உடனடியாகத் தாக்கல் செய்ய இயலவில்லை. இதற்கு, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் இந்த வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று கூறியுள்ளது மத்திய அரசு.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதால், நீர் பங்கீட்டு வரைவு திட்டத்துக்கு பிரதமர் ஒப்புதல் பெற முடியவில்லை. பிரதமர், துறை சார்ந்த அமைச்சர் ஒப்புதல் பெற 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

இதை அடுத்து காவிரி வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மேலும், வரைவு திட்டம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories