மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில நிதி அமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில நிதி மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி உரையாடுகிறார்.
இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ்-ஐ திரும்ப பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
உடல்நிலை கருத்தில் கொண்டு ஓரிருவர் தவிர, கூட்டமாக யாரையும் சந்திக்க கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளதால் அனைத்து மாநில நிதி மந்திரிகளுடன் அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார்.