பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் விஜயபுராவில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
கர்நாடகத்தில் மே 12-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ், பாஜக, மஜத கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கடந்த 2 நாள்களாக மாநில அளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று விஜயபுராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தலைவி சோனியா காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அவரும் இன்று விஜயபுராவில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.