வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால், தான் பிரதமராவேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2019ம் ஆண்டில் நடக்க உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியை ஏற்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, பிரதமராக பதவி ஏற்பேன் என்றார்.
மேலும், மோடியின் உண்மையான முகம் வெளியே தெரிய தொடக்கி விட்டது. இதனால் அடுத்த முறை அவர் பிரதமராக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.