உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடிக்கு எந்த இடம்?

இந்தியா சற்றுமுன்

01 09 May Narendra Modi - 20262018-ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக முதலிடத்தில் உள்ளார். இப்பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டாமிடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சலா மெர்கல் நான்காவது இடத்திலும், அமேசன் நிறுவனர் ஜெப் பிசோஸ் ஐந்தாவது இடத்திலும், போப் பிரான்ஸிஸ் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

பில் கேட்சுக்கு ஏழாவது இடமும், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எட்டாவது இடமும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது.

மற்ற முக்கிய உலக தலைவர்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் 12-வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே 14வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.