இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்கிறார்.கடந்த2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்ற மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக பக்கத்து நாடான நேபாளம் சென்றார். அதன் பிறகு இரண்டாவது முறையாக நேபாளம் சென்றிருந்த பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வரும் 11-ம் தேதி நேபாளம் செல்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாள் பிரதமராக பதவியேற்ற கே.பி. ஷர்மா ஒலி இந்தியா வந்தார். அப்போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து ஆலோசித்தார். இதையடுத்து பிரதமர் மோடி வரும்11-ம் தேதி நேபாளம் செல்கிறார் மோடி. அங்கு அருண்-3 எனப்படும் 900 மெகாவாட் ஹைட்ரோ எலெக்ட்ரிக் மின்திட்டம், பீஹாரின் ராக்ஸ், நேபாளின் காத்மாண்டு இடையே ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க நேபாளம் செல்கிறார் மோடி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari