பெங்களூரூவின் ஜலஹள்ளி பகுதியில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அட்டைகள் இருந்தது குறித்து செய்தியாளர்களின் கேள்வி பதில் அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 9,746 வாக்காளர் அட்டைகள் கிடைத்தது பற்றி விசாரிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. என்றார். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் வாக்காளர் அட்டைகள் இருந்ததுபற்றி எதுவும் கூறமுடியாது என்றும் 12வது முறையாக தேர்தலில் நிற்கும் நான் இந்த சோதனையை முதல்முறையாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி புகாரை அடுத்து, பெங்களூரூவின் ஜலஹள்ளி பகுதியில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் பிளாட் எண் 115ல் இருந்து பிரிண்டர்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.