கர்நாடகத்தின் மல்லேஸ்வரத்தில் கடந்த 1888 முதல் 1975 வரை ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் ஜி.சுப்ரமையம் சர்மா போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஆல் இந்தியா மகிளா மேம்பாட்டு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
சென்னையில் பிறந்த இவர், பத்தாண்டுகளுக்கு முன்பு பெங்களுருக்கு குடியேறினார். அவரது குடுமபம், பார்மசி, உள்கட்டமைப்பு, திரைப்ப்டங்க்குள் மற்றும் பால் பண்ணை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் சுதீக்ஷா குழுமம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது.
தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல, கல்வியாளர் குடும்பத்தை சேர்ந்தவன் என்று தெரிவித்துள்ள சர்மாவின் தந்தை ஜனாதிபதியும், பிரபல தத்துவவியலாளரும் ராதாகிருஷ்ணன் அவர்ளின் மருமகன் ஆவார்.
பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் போன்ற அரசியல் கட்சிகளில் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் சர்மா தெரிவித்துள்ளார்.