லல்லுவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு பாட்னாவில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் யாதவின் பேத்தி ஐஸ்வர்யா ராயை அவர் மணக்கவிருக்கிறார். இதனிடையே கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி சிறையில் லல்லு தண்டனை அனுபவித்து வந்தார். அண்மைக்காலமாக அவர் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனது மகன் திருமணத்தில் பங்கேற்க லல்லு கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக ஜார்க்கண்ட் அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை சிறை நிர்வாகம் கேட்டிருந்தது. இந்நிலையில் ராஞ்சி காவல் கண்காணிப்பாளர், ஜார்க்கண்ட் அட்வகேட் ஜெனரல் ஆகியோர் ஆட்சேபமில்லை என சான்றிதழ் அளித்ததை தொடர்ந்து லல்லுவுக்கு பரோல் வழங்கப்பட்டது. லல்லுவுக்கு ரிம்ஸ் மருத்துவமனை ஏற்கெனவே உடற்தகுதிச் சான்று வழங்கிவிட்ட நிலையில், லல்லு இன்று திருமணத்தில் பங்கேற்க உள்ளார்.
லல்லு மகனுக்கு இன்று திருமணம்
Popular Categories



