தனிப் பெரும் கட்சியாக பாஜக., உருவெடுத்துள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார் பி.எஸ்.எடியூரப்பா.
இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் மாளிகை வந்த அவர், ஆளுநர் வஜுபாய் ருதாபாய் வலாவைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.
பெருபான்மை ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளதாகவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று மாலை ஆளுநரை சந்தித்தார் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா!
வெற்றிக் கோட்டை தொட்டுவிட்ட நிலையில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது என பாஜக மூத்த தலைவர்கள் பெங்களூருவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். முடிந்தால் எதிர் அணியை உடைப்பது, முடியவில்லை என்றால் எதிர் அணியில் உள்ள சிலரை ராஜினாமா செய்ய வைப்பது போன்ற திட்டங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.
குதிரை பேரம் பேச வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி வேட்பாளர்கள் விலை போய்விடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.





நாட௠மà¯à®©à¯à®©à¯‡à®± மீணà¯à®Ÿà¯à®®à¯ காஙà¯à®•ிரஸ௠எஙà¯à®•à¯à®®à¯‡ வரகà¯à®•ூடாதà¯.