பெங்களூர்: நம்பிக்கை கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தார் எடியூரப்பா. அப்போது அவர், மே 19ஆம் தேதியான இன்று கீழ்வரும் தீர்மானத்தை முன் மொழிகிறேன் என்று கூறினார். #KarnatakaFloorTest #Yeddyurappa #BJP #Congress
என் தலைமையிலான அமைச்சரவை மீது அவை நம்பிக்கை வைத்துள்ளது என்றால் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்று எடியூரப்பா நம்பிக்கை கோரி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.
மேலும், தேர்தலுக்கு முன்னரும் பார்த்தேன். தேர்தல் நேரத்தில் கர்நாடகத்தின் மக்கள் இவ்வளவுக்கு அன்பையும் பாசத்தையும் நம்பிக்கையையும் காட்டியதை இதற்கு முன்னர் நான் கண்டதில்லை. கர்நாடக மக்கள் பாஜக.,வுக்காகவே வாக்களித்தனர்.
நான் கர்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் எனது நன்றியை காணிக்கை ஆக்க விரும்புகிறேன். இந்த மாநிலம் என் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளது. அதனால்தான் என் மீது நம்பிக்கை வைத்து 104 இடங்களை சட்டமன்றத்துக்காக அளித்திருக்கிறது…. என்று பேசினார்.




