புது தில்லி: வாட்ஸ் அப் வாய்ஸ் கால் வசதியை பயன்படுத்தி, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை தடை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சாதாரண மொபைல் போன் காலிங் வசதி மூலம் பேசும் போது, அரசுத் துறையால் கண்காணிக்க முடிகிறது. மேலும், வாய்ஸ் காலிங்கை குரல் பதிவு செய்வதும் சாத்தியமாகிறது. ஆனால், இணையவழித் தொடர்பில், வாட்ஸ்அப், மெசெஞ்சர், ஐஎம்ஓ இவை போன்ற ஆப்ஸ்கள் மூலம் குரல் வழி காலிங் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, கண்காணிப்பும் கட்டுப்பாடும் பதிவு செய்வதும் இயலாமல் போகிறது. இது பயங்கரவாதிகளுக்கு பெரும் வசதியாகப் போய்விட்டதால், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவற்றை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்குள் நடைபெறும் வாட்ஸ்அப் உரையாடலை கட்டுப் படுத்தும் நோக்கில், வாட்ஸ் அப்பை தடை செய்யும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய அரசு சில இடங்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் & வீடியோ காலிங் வசதியை தடை செய்ய பரிசீலனை செய்து வருகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். #WhatsApp #Terrorists




