மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போயுள்ளனர்.
காஷ்மீரில் மாநில அரசு பதவியிழந்த பின்னர், தற்போது மாநிலத்தில் பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. இதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் சிலர் காஷ்மீருக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
அவ்வாறு 83 வீரர்கள் நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்றுள்ளனர். இன்று மாலை இந்த ரயில் காஷ்மீர் வந்தடைந்தது. இந்நிலையில் முகல்சராய் ரயில் நிலையத்தில் சோதிக்கப்பட்ட போது, ரயிலில் 74 வீரர்கள் மட்டுமே இருந்துள்ளனர். 9 வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் எப்படி காணாமல் போனார்கள், எங்கே இறங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




