அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியின் போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த லட்சக் கணக்கானோருடன் பிரதமர் மோடி இன்று தனது நமோ செயலி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், இருள் சூழ்ந்த வருடங்களுக்கு பிறகு ஆயிரக் கணக்கான கிராமங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது 18 ஆயிரம் கிராமங்கள் மின் இணைப்பு பெறாமல் இருளில் மூழ்கி இருப்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக கூறிய பிரதமர் மோடி, இது துரதிர்ஷ்டமானது என்றார்.
இதனிடையே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியில் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.



