கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு செல்போன் இயங்கு தளத்துக்கு உள்ள செல்வாக்கை செல்போன் சந்தையில் தவறாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கூகுள் நிறுவனத்துகு ஐரோப்பிய யூனியன் 34 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதனை எதிர்த்து கூகுள் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே கூகுள் நிறுவனம் தனது இணையதள சேவையில் தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் பிற நிறுவனங்களை மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக 2017-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்துக்கு 19 ஆயிரம் கோடி ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



