திருப்பதி: சப்தகிரி என்றும் ஏழுமலை என்றும் ஹிந்துக்களால் போற்றிக் கொண்டாடப் படும் திருப்பதி ஏழுமலையான் சந்நிதியில், அன்பர்கள் பலர் அவ்வப்போது அளித்த நகைகள் மாயமான விவகாரத்தில், விசாரணைக் குழு அமைக்க வலியுறுத்தி 30 சாதுக்களும் 300க்கும் மேற்பட்ட இந்து இயக்க தொண்டர்களும் விஜயவாடாவில் இருந்து திருப்பதி நோக்கி பேரணியாகச் செல்லவுள்ளனர்.
வரும் ஜூலை 29 ஆம் தேதி விஜயவாடா கனகதுர்கா கோவிலில், அம்பிகைக்கு புடைவை சாற்றி காணிக்கை கொடுத்து, தங்கள் கோரிக்கையை ஏற்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அங்கிருந்து திருப்பதி நோக்கி பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் 30 கி.மி., தொலைவுக்கு பாதயாத்திரையாக திட்டமிட்டு, வரும் ஆக.12ஆம் தேதி திருப்பதி சென்றடைகின்றனர். விஜயவாடாவில் இருந்து சுமார் 500 கிராமங்களைக் கடந்து, கிராம மக்களிடம் பேசி, திருப்பதியில் பெரிய பொதுக்கூட்டத்துக்கும் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து சைவக்ஷேத்ரம் சிவஸ்வாமி கூறியபோது, இந்த 15 நாள் பேரணியை நாங்கள் முடிப்பதற்குள், அரசு ஒரு குழுவை நியமித்து, திருமலை திருப்பதி பெருமாளின் காணாமல் போன நகைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்தக் குழுவில் போர்ட் உறுப்பினர்கள், வேதக் குழு உறுப்பினர்கள், சுவாமிஜிக்கள் நகை மதிப்பீட்டாளர்கள் அறிஞர்கள் உள்ளிட்டோர் அடங்கியிருக்க வேண்டும். இந்தப் பேரணி நடைபெறும் 15 நாட்களுக்குள் அரசு இந்தக் குழுவை அமைக்காவிட்டால், திருப்பதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பகிரங்கப் படுத்துவோம்… என்றார்.





களவà¯à®ªà¯‹à®© நகைகளை அபகரிதà¯à®¤à®µà®°à¯à®•ளை சிறை பிடிதà¯à®¤à¯, தணà¯à®Ÿà®©à¯ˆ கொடà¯à®¤à¯à®¤à¯, அநà¯à®¤ நகைகளை மீணà¯à®Ÿà¯à®®à¯ à®à®´à¯à®®à®²à¯ˆà®¯à®©à®¿à®Ÿà®®à¯‡ ஒபà¯à®ªà®Ÿà¯ˆà®•à¯à®• நடவடிகà¯à®•ை எடà¯à®ªà¯à®ªà®¾à®°à®¾, வியாகà¯à®•ியானம௠பேசà¯à®®à¯ சநà¯à®¤à®¿à®°à®ªà®¾à®ªà¯ நாயà¯à®Ÿà¯ ?