வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதே போல் கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 6 செ.மீட்டர் மழையும் நீலகிரி மாவட்டம் நடுவட்டம், தேனி மாவட்டம் உத்தமபாளையம், பெரியார், சிவகங்கை மாவட்டம் நகர் பகுதிகளில் தலா 3 செ. மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
அதே போல் சேலம், பரமக்குடி, தேவலா, கூடலூர் பஜார், அறந்தாங்கி உள்ளிட பகுதிகளில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்
அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



