ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது, அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் அக்கறையில் அவரை முதுகில் சுமந்து ஆற்றின் அக்கரையில் விட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரைக் கால் மூழ்கும் அளவு கூட இல்லாத நிலையில் ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருக்க, பாஜக எம்எல்ஏ ஆற்றில் நடக்க முயற்சி செய்யாமல், அவரை காவலர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பலர் கண்டனக் கருத்து எழுப்பியுள்ளனர். ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ க்ருஷண் லால், இதில் அதிகார துஷ்ப்ரயோகம் ஏதும் இல்லை. நான் ஆற்றைக் கடக்க அவர் உதவினார். அவ்வளவே என்று பதில் கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ.வை முதுகில் சுமந்து ஆற்றைக் கடந்த காவலர்: படம் வெளியாகி பரபரப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari