வெங்கையா நாயுடு விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்

இந்தியா சற்றுமுன்

Venkaiah Naidu PTI - 2026

துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மாநிலங்களவை, மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மாநிலங்களவை துணை தலைவராக தேர்வான ஹரிவன்ஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நாளை காலை விருந்து அளிக்கவுள்ளார். இதில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.