கோல்கத்தா: மறைந்த முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் அவைத் தலைவருமான சோம்நாத் சட்டர்ஜியின் உடலை சிபிஎம் அலுவலகம் கொண்டு வர மறுத்துவிட்டார் அவரது மகன்.
முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி நேற்று காலமானார். அவரது உடலை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குக் கொண்டு வருமாறு சிபிஎம்., கேட்டுக் கொண்டும், அதற்கு செவிசாய்க்க மறுத்துவிட்டார் சோம்நாத்தின் மகன். மேலும், வீட்டுக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிமன் போஸை வெளியேறச் சொல்லி விட்டார்.
கடந்த 2008-09ல் காங்கிரஸ் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாபஸ் வாங்கியது கம்யூனிஸ்ட் கட்சி. மேலும், சோம்நாத் சட்டர்ஜியையும் மக்களவைத் தலைவர் பதவிவியில் இருந்து விலகுமாறு கூறியது. ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் கொதிப்படைந்த சிபிஎம்., அவரை கட்சியை விட்டு நீக்கியது.
இது போல் திரிபுராவின் முன்னாள் முதல்வர் நிருபன் சக்கரவர்த்தியையும் கட்சியை விட்டு நீக்கி பின்னர் உயிர் பிரியும் தருவாயில் கட்சியில் மீண்டும் சேர்த்தது சிபிஎம் என்பது குறிப்பிடத்தக்கது.




