மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 77.
1970 களில் இந்திய அணிக்காக விளையாடிய இடது கை பேட்ஸ்மேன் இவர். மும்பையைச் சேர்ந்த அஜித் வடேகர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புகழ்பெற்று விளங்கினார்.
மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெறக் காரணமானவர். 37 டெஸ்ட் போட்டியில் ஒரு சதம்,14 அரை சதம் உட்பட 2,113 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக முதல் கேப்டன் பொறுப்பு வகித்தவர் இவரே.
ஓய்வுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
இவருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டதால், மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை நேற்று காலமானார்.
அஜித் வடேகர் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Ajit Wadekar will be remembered for his rich contribution to Indian cricket. A great batsman & wonderful captain, he led our team to some of the most memorable victories in our cricketing history. He was also respected as an effective cricket administrator. Pained by his demise.
— Narendra Modi (@narendramodi) August 15, 2018




