பாரதத்தின் ஆற்றலை பாருக்கு வெளிப்படுத்தியவர் வாஜ்பாய்! : ராம.கோபாலன் புகழஞ்சலி!

Published:

atal bihari vajpayee ji - 2026
Prime Minister Atal Bihari Vajpayee. Express archive photo
சென்னை: பாரதத்தின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில்…
அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சிறந்த தேச பக்தரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழிகாட்டியுமாக விளங்கிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இறைவனடியை அடைந்தார். அவரது சீர்மிக செயலாற்றல், சிந்தனையால் பாரத தேசம் உலகப் புகழ் பெற்றது. வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக் காலம் பாரத தேசத்தின் அடையாளத்தை பெருமை கொள்ளத் தக்க வகையில் இருந்தது.
பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றி, ஏவுகணை, ராக்கெட் சோதனை, பரம் கம்யூட்டர் என பல வகையிலும் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைத்த தங்க நாற்கரசாலை திட்டம் மூலம், தரமான சாலை போக்குவரத்தை ஏற்படுத்தினார். ஒவ்வொரு சிறு கிராம சாலைகளையும் மேம்படுத்தி, நகரங்களுடன் இணைத்து நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு  வழி கண்டவர். இப்படி எண்ணற்ற சாதனைகளை நடத்திய அவரது ஆட்சி காலம் பாரதத்தின் பொற்காலம் எனலாம்.
கார்கில் போர் வெற்றியின் மூலம் மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் பாரத தேசத்தின் வலிமைமீது அபரா நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
பாராளுமன்ற விவாதங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு வலு சேர்த்தவர். சிறந்த ஜனநாயகவாதியான அவர், அனைத்து அரசியல் கட்சியினரையும், இராணுவ வீரர்களையும், விஞ்ஞானிகளையும், சாதனையாளர்களையும் அரவணைத்துப் போற்றியவர்.
அவரை இழந்து வாடும் அவரது உறவினர்கள், நண்பர்கள், மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
வாஜ்பாய் அவர்களின் ஆன்மா நற்கதியடைய, இந்து முன்னணியின் சார்பில் தமிழகத் திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தும், பொது இடங்களில் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்… என்று கூறியுள்ளார்.
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img