வெள்ளம் மற்றும் பெருமழையால் பாதிக்கப் பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர். மாநில அரசுகள், அரசுத் துறையினர், தனியார் அமைப்புகள் என பலரும் போட்டி போட்டு உதவிகளைச் செய்து வரும் நிலையில், யோகா குரு ராம்தேவும் தன் பங்குக்கு கேரளத்துக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.
கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும், கூடுதலாக ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்களும் அனுப்ப உள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.




