கேரளத்தில் இவ்வளவுக்கு வெள்ளத்தால் பெருஞ்சேதம் ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப் பட்டு, மெதுமெதுவாக போக்குவரத்து துவங்கிய நிலையில், வழக்கம்போல் இறைச்சிக் கழிவுகளை தமிழகத்தில் வந்து கொட்டி விட்டுச் செல்லும் துரோகத்தை கேரளத்தவர்கள் தொடங்கியுள்ளனர்.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த 2 மினி லாரிகள் சிறைபிடிக்கப் பட்டன. கன்னியாகுமரி அஞ்சுகிராமம் சோதனைச் சாவடி அருகே பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசா வசம் ஒப்படைத்தனர்.




