இன்னாங்கடா கத வுட்றீங்க…?! கேரளத்துக்கு குட்டு வைத்த தமிழக அரசு!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

ஆக.14 முதல் 19 வரை இடுக்கி, இடமலையாறு அணைகளில் இருந்து 36.28 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதே கேரளாவில் வெள்ளம் ஏற்பட காரணம்.

முல்லை பெரியார் அணையை திடீரென திறந்ததே வெள்ளத்துக்கு காரணம் என்ற கேரள அரசின் குற்றச்சாட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளது.

ஆக.15ல் முல்லைப் பெரியாறு அணை 140 அடியை எட்டியபோது, அணையிலிருந்து இடுக்கி அணைக்கு 1.24 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது; ஆனால் அன்று கேரளா அரசு இடுக்கி அணையில் இருந்து 13.79 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

கேரள வெள்ளத்துக்கு தமிழகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ள தமிழக அரசு, ஆக.16-ம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது, ஆனால் கேரளா 4.47 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டது என்று கூறியுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img