3 ஆண்டுகளுக்கு உட்பட்ட குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.2% அதிகரித்துள்ளது. இதன்மூலம் தற்போது 7.9% ஆக இருக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 8.1% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கான கடனுக்கு 8.25%-லிருந்து 8.45% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.




