ம.பி.யின் சைபி மசூதியில் பிரதமர் மோடி பேச்சு!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரபலமான சைஃபீ மசூதிக்குச் சென்றார் பிரதமர் மோடி. அவருக்கு அங்கே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் தனது உரையை அங்கே நிகழ்த்தினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது சைஃபீ மசூதி. இங்கே இமாம் ஹுசைன் உயிர்த் தியாகத்தை சிறப்பிக்கும் ஆஷுரா முபாரகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப் பட்டிருந்தார். அதன்படி மசூதிக்குச் சென்ற மோடியை ஷியா பிரிவைச் சேர்ந்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வரவேற்றனர். பிரதமர் மோடிக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி மதப் பிரிவுத் தலைவர் சையத்னா முஃபாதல் சைஃபுதீன், மோடி நீடூழி வாழப் பிரார்த்திப்பதாகக் கூறினார்.

அதன் பின்னர் அங்கே கூடியிருந்தவர்கள் தங்கள் வழக்கப்படி இறை துதி பாடல் பாடினர். தொடர்ந்து மோடி அங்கே தனது  உரையை நிகழ்த்தினார்.