அண்மைக் கால உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், பெரும்பாலானவர்களால் விமர்சிக்கப் படுகிறது என்பதுடன், பெரும்பான்மை மக்களின் உள்ளுணர்வையும் நம்பிக்கைகளையும் சிதைக்கும் வகையில் இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வாரம், அடுத்தடுத்த இரு தினங்களில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுகள் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் அளித்துள்ளன. குறிப்பாக., கள்ள உறவு குறித்த தீர்ப்பு, கள்ள உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனையை அளித்து வந்தது… அதையும் நீக்கி, கள்ள உறவு குறித்த அம்சம், விவாகரத்து கோரலுக்கான அடிப்படை அம்சமாக நீடிக்கும், ஆனால் கள்ள உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததில் இருந்து, ஒழுக்கமாக தன் மனைவியுடன் மட்டுமே வாழும் ஆண்கள் பலருக்கும் கிலி பிடித்துக் கொண்டுள்ளது.. இதனால் தம் மனைவியுடன் வேற்று ஆடவர் தொடர்பு கொண்டிருக்கிறார்களா, பேசுகிறார்களா என்றெல்லாம் சந்தேகத்தை வளர்த்துக் கொள்ளத் தூண்டியுள்ளது.
அடுத்த தீர்ப்பாக, சபரிமலை ஆன்மிக வழிபாட்டு புனிதத் தலம் என்பதை விட அது ஒரு சுற்றுலாத் தலம் என்ற கருத்தை விதைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதனால் எந்த வயதுடைய பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று ஒரு தீர்ப்பை, மக்களின் விருப்பத்துக்கு மாறாக வழங்கியுள்ளது.
இந்த இரு தீர்ப்பையும் ஒரே வரியில் சொல்லப் போனால், அடுத்த வீட்டுக்காரன் பொண்டாட்டியக் கூட்டிக் கொண்டு சபரிமலைக்கு சுற்றுலாப் பயணம் செய்வது சட்டப்படி சரியானதுதான் என்பதே சரி என்று கருத்துகள் பொதுவெளியில் பகிரப் படுகின்றன!




