‘ரத யாத்திரை நாயகர்’ எல்.கே. அத்வானிக்கு இன்று 91 வயது: பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து!

பின்னர் இன்று மதியம் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு வணக்கம் தெரிவித்து, வாழ்த்தினார். தொடர்ந்து இல்லத்தில் மற்றவர்களுடன் உரையாடினார்.

ரத யாத்திரை நாயகர், பாஜக.,வின் மூத்த தலைவர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி இன்று தனது 91ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது இல்லத்துக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வணங்கினார். அத்வானிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது அறிவாற்றல் அரசியல் அரங்கில் போற்றப்படுகிறது. இந்திய அரசியலில் அவரது தாக்கம் மகத்தானது. தன்னலம் கருதாமல் விடா முயற்சியுடன் கட்சியை கட்டமைத்து தொண்டர்களை சிறப்பாக வழிநடத்தியவர். அவரது ஆளுமை இந்திய அரசியலில் மகத்தானது. தன்னலமற்ற அவரது சேவையால் பாஜக.,வுக்கு மிகச் சிறந்த கார்யகர்த்தர்கள் கிடைத்துள்ளனர்’ என பாராட்டியுள்ளார்.

பின்னர் இன்று மதியம் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அவருக்கு வணக்கம் தெரிவித்து, வாழ்த்தினார். தொடர்ந்து இல்லத்தில் மற்றவர்களுடன் உரையாடினார்.

91ஆவது பிறந்த நாள் காணும் பாரதத்தின் மூத்த அரசியல் தலைவர் எல்.கே.அத்வானிக்கு, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மம்தா பானர்ஜி, சித்தராமையா, அசோக் கெலாட், ராஜ்யவர்தன் சிங் ரதோர், சுரேஷ் பிரபு, ராஜீவ் பிரதாப் ரூடி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.