பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைந்தது! பெட்ரோல்-டீசல் விலை இன்றும் குறைந்துள்ளன.
சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.41 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.09 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை செவ்வாய்க் கிழமை இன்று காலை அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.41 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.70.09 காசுகளாக உள்ளது.
தென் மாவட்டங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.09 என்றும், டீசல் 70.76 என்றும் விற்பனை ஆனது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன. அதேபோன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயரத் தொடங்கியது.
இதன் காரணமாக ஒன்றரை மாதங்களாக தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.




