
ஷில்லாங்: கோல்கத்தா நகர் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, இன்று விசாரணை நடத்துகிறது சிபிஐ.,! இதற்காக சிபிஐ., அதிகாரிகள் ஷில்லாங் வந்துள்ளனர்.
மேற்குவங்கத்தை புரட்டிப் போட்ட சாரதா சிட்பண்ட் நிதி மோசடி வழக்கு விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறது சிபிஐ.,! இந்த சிட்பண்ட் மோசடி விவகாரத்தில், ஆளும் கட்சிக்கு பாதகமான பல ஆதாரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்து, அவற்றை அழித்து விட்டார் ராஜீவ் குமார் என்று சிபிஐ., குற்றம் சாட்டுகிறது.
ராஜீவ் குமார், இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப் பட்ட சிறப்புக் குழுவின் தலைவராக விசாரணை மேற்கொண்டவர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரிடம் நேரில் தாங்களே போய் விசாரிக்க அவர் அலுவலகம் சென்றனர் சிபிஐ அதிகார்கள்.
அப்போது கோல்கத்தா போலீசாரால் அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு முதல்வர் மம்தாவின் உத்தரவே காரணம் என்று கூறப் படுகிறது.
இதனால் சிபிஐ அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் வைத்து இந்த விசாரணையை மேற்கொள்ள முடியாது என்று தீர்மானித்த உச்ச நிதிமன்றம், இரு தரப்புக்கும் பொதுவான இடமாக ஷில்லாங்கை தேர்வு செய்து அங்கேயே ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தலாம் என்று கூறியது.
இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் சில்லாங்கில் இருந்து தில்லி திரும்பினர். தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் உத்தரவின் படி,சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்த தயாராகி வருகின்றனர். இதற்காக தில்லியிலிருந்து மேகாலாயா மாநில தலைநகர் ஷில்லாங் வந்துள்ளனர்.
ராஜீவ் குமாரிடம் 80 முதல் 100 கேள்விகள் வரை கேட்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும், இன்று அவரிடம் விசாரணை நடத்துவதற்கான கேள்விகள் பட்டியலையும் சிபிஐ தயாரித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Kolkata Police Commissioner Rajeev Kumar will be questioned in Shillong by the CBI today over his alleged role in destroying evidence related to the Saradha chit fund scam. The Supreme Court had fixed the Meghalaya capital as the venue for his interrogation, saying that its “neutral” status will prevent unnecessary controversy.



