பிரதமர் மோதியுடன் மோதிப் பார்க்க நினைத்தவர் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் உரிமையாளர் விஜய் மல்லையா. இப்போது, நாடு விட்டு நாடு சென்று வேறு வழியின்றி மோதியிடம் சரண்டர் ஆகியிருக்கிறார்.

லண்டனில் இருந்து அவரை நாடு கடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டப் பட்ட நிலையில், தற்போது அவர் தனது சொத்துகளை வங்கிகள் தங்களுக்கு எவ்வளவு சேர வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொண்டு, மீதத்தை தரலாமே என்று கெஞ்சுகிறார். வங்கிகள் தங்களது ரூ.9 ஆயிரம் கோடியை மல்லையா ஏமாற்றிவிட்டார் என்று கூறுகின்றன.

ஆனால், தனக்கு ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதை அமலாக்கத்துறை முடக்கி வைத்திருக்கிறது. அவற்றை எடுத்துக் கொண்டு விடுவிக்கலாமே என்று கூறி வருகிறார்.

இந்நிலையில், மல்லையா போட்ட சில டிவீட்கள் இந்தக் கதறல் கதையை வெளியுலகுக்குக் கூறியுள்ளது.

விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை செய்துள்ளார் ஒரு பதிவில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியின் நடப்பு நாடாளுமன்றத்தின் நிறைவுப் பேச்சை கேட்டேன். எனது கவனத்துக்கு இது வந்தது. அவர் மிகச் சிறந்த பேச்சாளர் தான்! அப்பொழுது ஒன்றை கவனித்தேன் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபர் 9 ஆயிரம் கோடியை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார் என்று குறிப்பிட்டார்! அந்த நபர் நான் தான் என்று ஊடகங்கள் எண்னைக் குறிப்பிட்டு சொல்லுகின்றன

முந்தைய ட்வீட்டிலிருந்து இதையும் சேர்த்துப் படிக்கவும். நான் மதிப்புடன் கூறிக் கொள்வது என்னவென்றால் பிரதமர் ஏன் வங்கிகளுக்கு கட்டளை இடக்கூடாது..? என்னுடைய பணத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்களின் பணத்தை வங்கிகள் முழுவதுமாக ஏன் திரும்ப எடுத்துக் கொள்ளக்கூடாது?

கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கொடுத்த பொதுமக்களின் பணத்தை ஏன் முழுவதுமாக திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது? அதை பிரதமர் ஏன் வங்கிகளுக்கு வலியுறுத்தாமல் இருக்கிறார்?

இதை நான் பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன் நான் கர்நாடகத்தின் உயர் நீதிமன்றத்தின் முன் அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்! நேர்மையுடனும் முழு மனதுடனும் இதை நான் சம்மதிக்கிறேன்!

ஏன் வங்கிகள் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கொடுத்த பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை? அமலாக்கத்துறை நான் ஏதோ சொத்துக்களை மறைத்து வைத்திருப்பதாக கூறுகின்றன! அதனை ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன! அவ்வாறு நான் சொத்துக்களை மறைத்து வைத்திருந்தால் எப்படி 14 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்துகளை நீதிமன்றத்தின் முன்னால் சமர்ப்பித்து இருக்க முடியும்?

இது பொது மக்களை தவறாக வழி நடத்துவதும் தவறான தகவல்களை பொதுமக்களுக்கு கொடுப்பதுமாக உள்ளது எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்!

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.