பெற்ற குழந்தையின் முகத்தைப் பார்க்காமலேயே உயிர் விட்ட வீரர்!

இந்தியா சற்றுமுன்

army martyr - 2026

தான் பெற்ற குழந்தையை ஒரு முறை கூடப் பார்க்காமல், பார்க்க வரும் சந்தோஷத்திலேயே இருந்து, நாட்டுக்காக உயிர் நீத்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ராணுவ வீரர் ரோஹிதாஷ் லம்பா.

லம்பாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது போனில் மட்டுமே குழந்தையின் நலம் விசாரித்து வந்த ரோஹிதாஷ் லம்பா, விரைவில் விடுமுறைக்கு வீடு திரும்பி குழந்தையை பார்க்கும் ஆசையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் உள்ள கோரிபொரா பகுதியில் 70 வாகனங்களில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் வந்தபோது, பாகிஸ்தானின் ஆதரவில் இயங்கி வரும் ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்த தற்கொலைப் படை பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளூடன் கூடிய  வாகனத்தால் மோதி தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாகுதலில் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கி உள்ளது. இந்தக் கோரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்த ராணுவ வீரரை ரோஹிதாஷ் லம்பாவும் ஒருவர். தன் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்தவர், பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்தது கேட்டு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.