திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை எனப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இங்கே பெண்கள் கலந்து கொண்டு செய்யும் பொங்கல் விழா மிகச் சிறப்பு வாய்ந்தது. பெண்களின் சபரிமலை என்று சொல்லக் கூடிய இந்தத் தலத்தில் பெண்கள் அதிகளவில் குவிகின்றன.
இந்நிலையில், பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




